லியோ
லோகேஷ் கனகராஜ் - விஜய் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் தான் லியோ.
இப்படத்தின் மீது ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, வசூல் ரீதியாக லியோ மாபெரும் அளவில் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது.
உலகளவில் ரூ. 598 கோடிக்கும் மேல் வசூல் செய்து விஜய்யின் திரை வாழ்க்கையில் புதிய வசூல் சாதனையை இப்படம் செய்தது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், ஜார்ஜ் மரியம், மிஸ்கின், சாண்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
சன் டிவியில் லியோ
திரையரங்கம் மற்றும் ஓடிடி என கலக்கிய லியோ திரைப்படம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
ஆம், பொங்கல் பாண்டியை முன்னிட்டு லியோ படத்தை முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யவுள்ளனர். அதற்கான ப்ரோமோ வீடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ..

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
