காம்போ பேக்காக விற்கப்படும் விஜய்யின் லியோ டிக்கெட்- ரசிகர்கள் ஷாக்
விஜய்யின் லியோ
வருகிற அக்டோபர் 19ம் தேதிக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் லியோ முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் தான் உள்ளார்கள்.
ஆனால் கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் அதிகாலை 4 மணி காட்சிகள் உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் இருந்து பல ரசிகர்கள் வேற மாநிலங்கள் சென்று கூட படம் பார்க்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஷாக்கிங் செய்தி
இந்த நிலையில் கோவையில் உள்ள பிரபல திரையரங்கான கே.ஜி.சினிமாஸ் திரையரங்கில் லியோ படத்தின் பால்கனி டிக்கெட்டுக்காக ரூ. 192 வசூலிக்கப்படும் போது அதனுடன் காம்போ பேக்காக ரூ. 400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு ஜி.எஸ்.டி எல்லாம் சேர்த்து ரூ.450 வரை வசூலிக்கப்படுகிறது.
காம்போ பேக்கில் டிக்கெட் வாங்குபவர்கள் டிக்கெட் எடுக்கும் போது பாப்கான், குளிர்பானம் போன்றவற்றையும் சேர்த்து பதிவு செய்து வாங்கி செல்ல வேண்டும் என திரையரங்க ஊழியர்கள் கூறுகின்றனராம்.
இதனால் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri