லியோ டிக்கெட் புக்கிங்கில் தில்லு முல்லா.. ரசிகர்கள் கடும் வாக்குவாதம்
லியோ ப்ரீ புக்கிங்
லியோ படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் துவங்கிவிட்டது. ப்ரீ புக்கிங்கிலேயே பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களின் வசூல் சாதனையை லியோ முறியடித்து வருகிறது.

இந்நிலையில், லியோ USA பிரிமியர் அட்வான்ஸ் புக்கிங்கில் இதுவரை 8500-க்கும் மேல் டிக்கெட்ஸ் விற்பனை ஆகிவிட்டது. இதன்மூலம் இரண்டு லட்சம் டாலர் வரை வசூல் லியோ படத்திற்கு கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
புக்கிங்கில் தில்லு முல்லா
ஆனால், அது உண்மையில்லை இதுவரை லியோ USA ப்ரீ புக்கிங்கில் 7000 டிக்கெட்ஸ் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. இதன்மூலம், $1,87 லட்சம் டாலர் மட்டுமே வசூல் செய்துள்ளது என மற்றொரு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இதனால் லியோ USA வசூலில் தில்லு முல்லா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுவரை இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் எதுவுமே கூறாத நிலையில், சில ட்ராக்கர்ஸ் கூறுவதை வைத்துக்கொண்ட ரசிகர்கள் மத்தியில் கடும் வாக்குவாதம் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கான தெளிவான விளக்கம் தயாரிப்பு தரப்பில் இருந்து மட்டுமே தரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri