ரஜினியின் ஜெயிலர் படத்தை பல இடங்களில் பீட் செய்யாத விஜய்யின் லியோ- முழு விவரம் இதோ
ரஜினி Vs விஜய்
சினிமாவில் எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்தில் இருந்து முன்னணி நடிகர்களை வைத்து ரசிகர்களின் சண்டை இருந்துகொண்டு தான் இருக்கிறது. இப்போது ரஜினி-விஜய் ரசிகர்களுக்கு இடையே தான் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.
ரஜினி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் ஜெயிலர் என்ற படம் நடித்தார். இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என மற்ற மொழி நடிகர்கள் நடிக்க படம் பெரிய அளவில் ஜெயித்தது.
மொத்தமாக படம் ரூ. 650 கோடி வரை சாதனை செய்தது, தயாரிப்பு குழுவும் லாபத்தில் ரஜினி, நெல்சன், அனிருத் 3 பேருக்கும் கார் மற்றும் பணம் கொடுத்தார்கள்.
அண்மையில் விஜய்யின் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகி இருந்தது. ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரை ரூ. 550 கோடி மேல் வசூல் சாதனை செய்து வருகிறது.
இதனால் விஜய்யின் லியோ, ரஜினியின் ஜெயிலர் பட வாழ்நாள் சாதனையை முறியடிக்குமா என்று தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஜெயிலர்-லியோ
15 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லியோ பல இடங்களில் ரஜினியின் ஜெயிலர் பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது, சில இடங்களில் இன்னும் ஜெயிக்கவில்லை.
அப்படி எந்தெந்த இடங்களில் லியோ மற்றும் ஜெயிலர் டாப்பில் உள்ளது என்ற விவரத்தை காண்போம்.
- தமிழ்நாடு- லியோ
- கர்நாடகா- ஜெயிலர்
- ஆந்திரா/தெலுங்கானா- ஜெயிலர்
- வட இந்தியா- லியோ
- மலேசியா- ஜெயிலர்
- சிங்கப்பூர்- லியோ
- கல்ப்- லியோ
- வட அமெரிக்கா- ஜெயிலர்
- பிரான்ஸ்- லியோ
- ஆஸ்திரேலியா- ஜெயிலர்
- Uk, Europe- லியோ
-
இலங்கை- ஜெயிலர்