முக்கிய இடத்தில் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் லியோ.. இந்திய படங்களை பின்னுக்கு தள்ளிய விஜய்
லியோ திரைப்படம்
லியோ இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.
அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இன்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் லியோ படத்தின் டிரைலர் வெளியாகிறது.
லியோ படத்தின் ப்ரீ புக்கிங் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை ஓரங்கட்டி வருகிறது. இந்நிலையில், தற்போது UKல் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே £302K வசூல் செய்துள்ளது.
நம்பர் 1 இடத்தில் லியோ
இதன்மூலம் அதிகம் வசூல் செய்த டாப் 5 இடங்களில் படங்களில் ஒன்றாக லியோ இடம்பிடித்துள்ளது. ரிலீஸுக்கு முன்பே டாப் 5ல் வந்துள்ள லியோ, கண்டிப்பாக ரிலீஸுக்கு பின் UKல் அதிகம் வசூல் செய்த நம்பர் 1 இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெரும் என கூறப்படுகிறது.
இதன்மூலம் அனைத்து இந்திய திரைப்படங்களையும் நடிகர் விஜய் பின்னுக்கு தள்ளிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.