உலகளவில் லியோ செய்த வசூல் சாதனை.. இதுவரை எவ்வளவு தெரியுமா
லியோ
தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த லியோ படம் உலகளவில் பல இடங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட வசூலில் இதுவரை லியோ படத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லியோ படத்தின் HD Print திடீரென இணையத்தில் சமீபத்தில் லீக்கானது. இதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்தனர்.
HD Print லீக்கான பின்பும் லியோ படத்திற்கான வசூல் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.
வசூல் விவரம்
கேரளா, Gulf நாடுகள், France, UK, வட இந்திய்யா, German, சிங்கபூர் போன்ற நாடுகளில் இதுவரை எந்த ஒரு விஜய் படமும் செய்திராத சாதனையை லியோ செய்துள்ளது.

இப்படம் வெளிவருவதற்கு முன் ரூ. 487 கோடிக்கும் மேல் பிசினஸ் செய்யப்பட்டது. ரிலீஸுக்கு பின் தற்போது உலகளவில் ரூ. 570 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி வருகிறது.