லேசா லேசா பட நடிகர் மருத்துவமனையில் கவலைக்கிடம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் தற்போது மருத்துவமணியில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
ஸ்ரீனிவாசன்
மலையாள சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஸ்ரீனிவாசன். 70கள் தொடங்கி தற்போது வரை அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் அவர் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
அவருக்கு கடந்த மார்ச் 30ம் தேதி திடீரென நெஞ்சு வலி வந்ததால் அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வென்டிலேட்டர்
ஸ்ரீனிவாசனுக்கு இதய bypass சர்ஜரி நடந்திருக்கும் நிலையில் தற்போது அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. அவர் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
