விக்னேஷ் சிவனுக்கு சிக்கல் மேல் சிக்கல்.. சட்டப்படி நடவடிக்கை எடுத்த நிறுவனம்
இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்க இருந்த படம் தீடிரென் ட்ராப் ஆனது. ஒரு வருடம் அஜித்துக்காக அவர் காத்திருந்த நிலையில் அதன்பின் வேறு வழியில்லாமல் அடுத்த படத்துக்கு தயாரானார்.
அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐசி லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற படத்தினை அவர் பூஜையுடன் தொடங்கி இருக்கிறார். பூஜை முடிந்த மறுநாளே அந்த டைட்டில் என்னுடையது என சொல்லி ஒரு இயக்குனர் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ்
இந்நிலையில் எல்ஐசி நிறுவனம் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் 7 Screen ஸ்டூடியோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
எல்ஐசி நிறுவனத்திற்கு இருக்கும் நல்ல பெயரை கெடுக்கும் வகையில் இருக்கிறது. 7 நாட்களுக்குள் பட டைட்டிலை மாற்ற வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் கூறி இருக்கின்றனர்.