பிரதீப் ரங்கநாதனின் LIK படத்திற்கு நடந்த படு சூடான வியாபாரம்... ரிலீஸ் தேதியுடன் வந்த அறிவிப்பு
பிரதீப் ரங்கநாதன்
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் பிரதீன் ரங்கநாதன்.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கியவர் அப்படத்தின் மூலமும் மாபெரும் வெற்றியை கண்டார்.
பின் டிராகன், டியூட் படங்கள் நடித்தார், அப்படங்களும் பிரதீப் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங்.

புதிய படம்
பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், அனிருத் தான் இசையமைத்துள்ளார். பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் டீஸ்ர் கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்க டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார்களாம். அதோடு படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மார்க்கெட் குளிர்சாதன பெட்டிகளை ஹேக்கர்களிடமிருந்து காக்க பிரித்தானிய அரசு ரகசிய நடவடிக்கை News Lankasri
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri