கணவர் மறைவு பற்றி மீனா எமோஷ்னலாக போட்ட பதிவு! வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர்
மீனா
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 27ம் தேதி உடலநலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு 48 வயதாகி இருந்த நிலையில் இந்த திடீர் மரணம் சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
மீனா தான் கணவரது இறுதி சடங்குகளை செய்து முடித்தார். கணவர் மரணத்திற்கு பிறகு அவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது எமோஷ்னலாக பதிவிட்டு வருகிறார். கணவர் மரணத்திற்கான காரணம் பற்றி பொய்யான செய்திகள் பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டார் அவர்.

வாழ்க்கை ரோலர் கோஸ்டர் போன்றது
இந்நிலையில் தற்போது மீனா வழக்கை பற்றி பேசி ஒரு பதிவை போட்டிருக்கிறார். அவரது இளம் வயது போட்டோக்களை பதிவிட்டு 'வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் . அதை வாழுங்கள். இந்த நேரம் மட்டுமே நம்மிடம் இருக்கிறது' என மீனா குறிப்பிட்டு இருக்கிறார்.
எதிர்காலம் நம்மிடம் இல்லை, என்ன நடக்கும் என தெரியாது என்பதை தான் மீனா இப்படி குறிப்பிட்டு இருக்கிறார்.
சிம்புவுக்கு தீவிரமாக பெண் தேடும் குடும்பத்தினர்! எந்த ஊரில் தெரியுமா