லிப்டில் மாட்டிக்கொண்டு தவித்த புகழ் ! பரபரப்பான ஹோட்டல் மாடி கட்டிடம்..
சின்னத்திரை நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் புகழ்.
இவர் திருச்சி தென்னூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட ஓட்டல் ஒன்றின் திறப்பு விழாவிற்கு புகழ் வந்துள்ளார்.
அந்த ஹோட்டல் 3வது மாடியில் அமைந்திருந்ததால் ஹோட்டலை திறந்து வைத்த நடிகர் புகழ், அதே கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்த ஜுவல்லரி கடையை பார்வையிட லிப்ட் மூலம் கீழே வந்துள்ளார்.
புகழுடன் ஒருசிலர் மட்டும் லிப்டில் செல்ல போட்டோகிராபர்கள், பவுன்சர்கள் உள்ளிட்ட பலர் மாடி படி வழியாக தரை தளத்தில் உள்ள ஜுவல்லரிக்கு விரைந்து சென்று காத்திருந்தனர்.
சுமார் 10 நிமிடத்திற்கு மேலாகியும் கீழே வராததால் ஹோட்டலில் காத்திருந்தவர்கள் அனைவரும் பதட்டமடைந்துள்ளனர். 10 நிமிடத்திற்கு பின் கீழே வந்திறங்கிய லிப்டில் வேர்க்க விறுவிறுக்க புகழ் வெளியில் வந்தாராம்.
லிப்ட் வேலை செய்யாமல் போனதாலும் புகழ் அதில் மாட்டி கொண்டதாலும் அந்த ஹோட்டலே 10 நிமடம் பரபரப்பாகியுள்ளது.