லைகர் திரைவிமர்சனம்
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே நடிப்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் லைகர். தர்மா ப்ரோடக்ஷனஸ் தயாரிப்பில் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பை லைகர் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை விமர்சனத்தில் காண்போம்..
கதைக்களம்
மும்பையில் ஒரு நகரத்தில் டீ கடை வியாபாரம் செய்து வருபவர்கள் விஜய் தேவரகொண்டா (லைகர்) மற்றும் அவரின் அம்மா ரம்யா கிருஷ்ணன். தந்தை இல்லாமல் மும்பையில் வாழ்ந்து வரும் விஜய் தேவரகொண்டாவிற்கு MMA-வில் சேர்ந்து பெரிய ஃபைட்டர் ஆக வேண்டும் என்பது ஆசை. அதன்படி KBD என்ற சண்டைப் பயிற்சி கூடத்தில் சேரும் விஜய் தேவரகொண்டா தனது திறமையை நிருப்பித்து கோச்-ன் கவனத்தை பெருக்கிறார். அதே சமயம் கதாநாயகி அனன்யா பாண்டேவும் விஜய் தேவரகொண்டாவின் திறமையை பார்த்து காதலில் விழுகிறார்.
அவர்கள் இருவரும் ஒன்றாக காதலித்து சுற்றி வருவது ரம்யா கிருஷ்ணனுக்கு பிடிக்காமல் போக, விஜய் தேவரகொண்டாவின் கனவு பாதிக்கப்படும் என சொல்லி அவரை பிரிக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் அடங்காத அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டாவை அவரின் பிறந்தநாள் அன்று சந்திக்க அழைக்கிறார். அந்த இடத்தில் அனன்யா பாண்டேவின் அண்ணன் விஜய் தேவரகொண்டாவிற்கு திக்குவாய் என்ற உண்மையை கூற அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டாவின் குறையை கண்டு அவரை கழட்டி விடுகிறார்.
அன்றிலிருந்து தனது கனவில் கவனம் செலுத்தும் விஜய் தேவரகொண்டா சண்டையில் அனைவரையும் தோற்கடித்து தேசியளவில் சாம்பியனாக மாறுகிறார். பின் விஜய் தேவரகொண்டா தேசியளவில் சாம்பியன் ஆனது மட்டுமின்றி உலகளவில் சாம்பியனாக வேண்டும் என தனது ஆசையை கூறுகிறார். பின் அவரின் வாழ்க்கையில் சில திடுக்கிடும் திருப்பங்களை சந்திக்க நேர்க்கிறது. விஜய் தேரகொண்டாவின் International சாம்பியனாகும் ஆசை நிறைவேறியதா? காதலி அனன்யா பாண்டேவுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே லைகர் படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
விஜய் தேவரகொண்டா திக்குவாய் கதாபாத்திரத்தில் நடித்ததும் சரி, உடல் மாற்றத்திலும் சரி தனது 100% கொடுத்திருக்கிறார். சண்டை காட்சிகளை கனகச்சிதமாக செய்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. கதாநாயகி அனன்யா பாண்டேவின் நடிப்பு சொல்லும் அளவிற்கு இல்லை, பல காட்சிகள் முகம் சுளிக்கும் படி தான் உள்ளன. ரம்யா கிருஷ்ணன் ஒகே. படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் நடிப்பு சொல்லும்படி இல்லை.
படத்தின் வேகத்தை குறைக்கும் படி இடை இடையே பாடல்கள் வந்துவிடுகின்றனர். எந்த இடத்தில் ஏன் இந்த பாடல் என கேட்கும்படி இருக்கின்றன. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என மற்ற தொழிலில்நுட்ப கலைஞர்கள் தங்களின் கடமையை சிறப்பாக செய்துள்ளனர். சண்டை காட்சிகள் அனைத்தும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.
இயக்குநர் பூரி ஜெகன்நாத் திரைக்கதையில் சொப்பி இருக்கிறார். இதுவரை பலரும் பார்த்து சலித்த கதையை பட்டி டிங்கரிங் செய்து லைகர் படத்தை எடுத்து இருக்கிறார். ஆனால் அது சுத்தமாக எடுப்படவில்லை. படத்தில் வில்லன் என்ற ஒரு கதாபாத்திரமே இல்லை. இதனால் கதையில் ஒரு நேர்த்தி இல்லாமல் பொய்விடுகிறது. கிளைமாக்ஸ் காட்சி மொத்தமாக சொத்தபல், Mike Tyson-யை கூட்டிவந்து ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க வைத்துள்ளனர். International சாம்பியனாகும் ஆசையுடன் வந்த விஜய் தேவரகொண்டா பைனல்-ஸில் கலந்து கொண்டாரா என்பது இயக்குநருக்கே தெரியும்.
க்ளாப்ஸ்
சண்டை காட்சிகள்
விஜய் தேவரகொண்டா
பல்ப்ஸ்
திரைக்கதை
Mike Tyson கேமியோ
கிளைமாக்ஸ்