இவ்ளோ பணம் எங்கிருந்து வந்தது.. சிக்கலில் மாட்டிய இயக்குனர் மற்றும் நடிகை
சினிமா துறை என்றாலே கருப்பு பண புழக்கம் அதிகமாகவே இருக்கும் என பொதுவாகவே ஒரு பேச்சு இருக்கிறது. அதை மறுக்க முடியாது என்றாலும் அது பற்றி உறுதியான செய்திகளும் வந்ததில்லை.
லைகர்
தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் வந்து படுதோல்வி அடைந்த லைகர் படம் தான் கருப்பு பண சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்த நிலையில், அதற்கான பணம் எங்கே இருந்து வந்தது என கேள்வி எழுந்திருக்கிறது.
அரசியல்வாதிகள் பலரும் கருப்பு பணத்தில் இந்த படத்தில் போட்டிருப்பதாகவும், அதை வெள்ளையாக மாற்ற இப்படி செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த Bakka Judson என்பவர் புகார் அளித்து இருக்கிறார்.
15 மணி நேரம் விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக அமலாக்க துறை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அவர்கள் நேற்று அமலாக்கத்துறை முன் ஆஜரான நிலையில் 15 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தி இருக்கிறார்கள். பணம் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பது பற்றியும் அவர்கள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
120 கோடி பட்ஜெட்டில் உருவான லைகர் படம் ஐந்து மொழிகளில் வெளியாகி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணாத்த ஒரு சுமார் திரைப்படம் தான் - உண்மையான கலெக்ஷனை போட்டுடைத்த உதயநிதி..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
