வெளிநாட்டில் LiK திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பல கோடி நஷ்டம் ஏற்படுமா?
Love Insurance Kompany
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்துள்ள திரைப்படம் Love Insurance Kompany. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, கௌரி ஜி. கிஷன், சீமான், ஷா ரா ஆகியோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

ஆனால், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
பல கோடி நஷ்டம் ஏற்படுமா
இந்த நிலையில், LiK திரைப்படத்தின் வெளிநாட்டு வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் இதுவரை இப்படம் ரூ. 9.3 கோடி வசூலித்துள்ளது. ஆனால், இப்படம் ரூ. 22 கோடி வசூல் செய்தால் மட்டுமே லாபத்தை எட்டும் என்கின்றனர். இதே போல் வரும் நாட்களிலும் வசூல் செய்தால், இப்படம் வெளிநாட்டில் நஷ்டத்தை சந்திக்கும் என கூறப்படுகிறது.
