விஜயகாந்த் சமாதியில் நடிகர் புகழ் எடுத்த சபதம்.. இரண்டாவது முறையாக வந்து முக்கிய அறிவிப்பு
நடிகை விஜயகாந்த் மறைவுக்கு பல நட்சத்திரங்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் வெளியூர், வெளிநாட்டில் இருந்த பல நடிகர்கள் தற்போது சென்னைக்கு திரும்பிய நிலையில் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் சூர்யா இன்று விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கண்ணீர் விட்டு அழுதார். மேலும் காமெடி நடிகர் புகழ் இரண்டாவது முறையாக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
உணவு வழங்க போகிறேன்
விஜயகாந்த் மறைந்த அன்றே நேரில் வந்து புகழ் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டாம் முறையாக விஜயகாந்த் சமாதியில் அவர் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் போல நானும் என்னுடன் கே கே நகர் ஆபிசில் தினமும் மதியம் பசி என வருபவர்களுக்கு உணவளிக்க போகிறேன். அதை இன்று தொடங்குவதால் அதற்காக கேப்டனிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தேன் என புகழ் கூறி இருக்கிறார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan