17 வயது நடிகையை அனைவரின் முன் கத்திய இயக்குனர் லிங்குசாமி ! கண்கலங்கிய கதாநாயகி
விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் உப்பெண்ணா.
இதில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார், 17 வயது இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லிங்குசாமி இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.
இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு உணர்வுபூர்வமான காட்சி படமாக்கப்பட்டதாம், அந்த காட்சியில் இயக்குனர் லிங்குசாமி எதிர்பார்த்தளவு கீர்த்தி நடிக்கவில்லையாம்.
மேலும் பல டேக்குகள் வாங்கியும் அவரின் நடிப்பு திருப்தி இல்லாத காரணத்தினால் அனைவரின் முன்னிலையிலும் கீர்த்தியை சத்தம் போட்டு திட்டியுள்ளார் லிங்குசாமி.
இதனால் மனமுடைந்த கீர்த்தி அழுது கொண்டே கேரவனுக்கு சென்றுள்ளார், இது தற்போது டோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.