சினிமாவில் நடிக்க ஆசை இல்லை.. அஜித் பற்றிய உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
சமீபத்தில் கூட இப்படத்திலிருந்து ஸ்டண்ட் காட்சி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தனர். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படம் தான் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரும், வளர்ந்து வரும் முக்கிய இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தான் இப்படத்தை இயக்குகிறார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அஜித் பற்றி பேசிய லிங்குசாமி
இந்த நிலையில், பிரபல இயக்குனர் லிங்குசாமி ஜீ படத்தின்போது அஜித்துடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இதில் "அஜித் சாருக்கு அந்த நேரத்தில் படம் நடிக்கவே ஆசை இல்லை. என் படம் மட்டுமல்ல வேறு எந்த படத்திலும் நடிக்க அவருக்கு ஆசையே இல்லை. அவருக்கு முழுக்க முழுக்க கார் ரேஸ் மீது தான் ஆர்வம் இருந்தது" என கூறினார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
