இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை.. ஷாக்கிங் செய்தி
லிங்குசாமிக்கு சிறை தண்டனை
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி. இவர் அடுத்ததாக பையா 2 படத்தை இயக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமிக்கு செக் மோசடி வழக்கில் விதிக்கப்பட்டிருந்த 6 மாத கால சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் சமந்தாவை வைத்து லிங்குசாமி இயக்குவதாக இருந்த திரைப்படம் தான் எண்ணி ஏழு நாள்.
இப்படத்திற்காக வாங்கிய கடன் ரூ.1 கோடியே 3 லட்சத்தை, லிங்குசாமி திரும்ப செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் லிங்குசாமி மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்து.
உத்தரவை உறுதி செய்த நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆகஸ்டில் தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் தள்ளுபடி செய்ததுடன், கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டும் என்ற உத்தரவையும் உறுதி செய்துள்ளது.
ஆனால் தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்து லிங்குசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் ' இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது'.
'அவர்கள் கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் ' என கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மீனாவா இது?- சுத்தமாக மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க