நான் ஏதாவது செய்யணுமா.. ரஜினி குறித்து பேசிய இயக்குனர் லிங்குசாமி

By Kathick Sep 10, 2024 02:00 PM GMT
Report

லிங்குசாமி

இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பிறகு ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் அஞ்சான், பையா, சண்டகோழி என பல படங்களை இயக்கியுள்ளார்.

நான் ஏதாவது செய்யணுமா.. ரஜினி குறித்து பேசிய இயக்குனர் லிங்குசாமி | Lingusamy Talk About Rajinikanth Gesture

படங்களை இயக்குவதை தொடர்ந்து, இவர் தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் கீழ் சில படங்களை தயாரித்துள்ளார். அந்த வகையில், இவர் தயாரிப்பில் வெளியான உத்தம வில்லன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறாமல் படு தோல்வி அடைந்தது.

சல்மான்கான், ராஷ்மிகாவை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த முன்னணி நடிகை! யார் தெரியுமா

சல்மான்கான், ராஷ்மிகாவை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த முன்னணி நடிகை! யார் தெரியுமா

இதனால் பெரும் நஷ்டத்திற்கு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தள்ளப்பட்டது. இந்த நிலையில், பிவிபி நிறுவனத்திடம் இருந்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கிய பணத்தை திருப்பித்தர காசோலை கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த காசோலை பவுன்ஸ் ஆனதால் பிவிபி நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

ரஜினி குறித்து பேசிய லிங்குசாமி

அதன் தீர்ப்பில் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. இவ்வாறு நிலைமை இருக்க, தீர்ப்பு வந்த சமயத்தில் ரஜினி போன் செய்து பேசியதை பற்றி லிங்குசாமி குறிப்பிட்டுள்ளார்.

நான் ஏதாவது செய்யணுமா.. ரஜினி குறித்து பேசிய இயக்குனர் லிங்குசாமி | Lingusamy Talk About Rajinikanth Gesture

அதில், வழக்கு தொடர்பான பிரச்சனையில் நான் இருந்தேன் அப்போது ரஜினி எனக்கு போன் செய்து நான் ஏதாவது செய்யணுமா, தற்போது நிலவரம் என்ன எவ்வளவு கொடுக்க வேண்டும் சொல்லு முடித்துவிடலாம் என்று ரஜினி கேட்டதாகவும், இது போன்ற ஒரு மனசு இருப்பதால் தான் இன்றும் சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கிறார் ரஜினி எனவும் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US