வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை என விமர்சனம்.. பதிலடி கொடுத்த விஜய்
நடிகர் விஜய் நேற்று மதுரை மாநாட்டில் பேசியது பற்றி தான் இணையத்தில் பரபரப்பாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு விஜய் நேரடியாகவே பதிலடி கொடுத்து இருக்கிறார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகும் வீட்டை விட்டு வெளியில் வருவது இல்லை, ஒர்க் ஃப்ரம் ஹோமில் அரசியல் செய்கிறார் என அவரை சிலர் தாக்கி பேசி வருகின்றனர்.
சிங்கம் வேட்டைக்கு தான் வரும்
வெளியில் வருவது இல்லை என அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தற்போது பதிலடி கொடுத்து இருக்கிறார் விஜய்.
"சிங்கம் வேட்டைக்கு தான் வெளியில் வரும், வேடிக்கை பார்க்க எல்லாம் வராது. சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிரும்" என விஜய் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
விஜய் பேசிய முழு வீடியோ இதோ.