விஜய் நடிக்க மறுத்த படங்கள், ஆனால் அதெல்லாம் செம ஹிட்- அப்படி என்னென்ன படங்கள் மிஸ் செய்தார் பாருங்க
நடிகர் விஜய்
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்புகள் அவ்வப்போது இடைவேளை விடப்பட்டு நடந்து வருகிறது. அடுத்தக்கட்டமாக கோட் படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல் வந்துள்ளது, ஆனால் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
இந்த நேரத்தில் தான் விஜய் தான் அரசியலில் நுழைய இருப்பதாகவும் கட்சி பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனவும் அறிவித்தார்.
எனவே விஜய்யின் கடைசி படமான 69வது படம் கடைசியாக யார் இயக்க போகிறார் என்ற பெரிய கேள்விகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

மிஸ் செய்த படங்கள்
நடிகர் விஜய் படங்கள் தேர்வு செய்து நடித்ததில் நிறைய படங்களை மிஸ்செய்துள்ளார். அப்படி என்னென்ன படங்கள் தன்னிடம் வந்தும் விஜய் நடிக்க மறுத்துள்ளார் என்பதை காண்போம்.
தரணி இயக்கத்தில் விக்ரம் நடிக்க தூள், ஷங்கர் இயக்கிய முதல்வன், லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி, ஹரி இயக்கிய சிங்கம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா.
இந்த படங்களின் வாய்ப்புகள் முதலில் விஜய்யிடம் சென்றுள்ளது, ஆனால் விஜய் கதையை வேண்டாம் என கூறவே மற்ற நடிகர்களிடம் பட வாய்ப்பு சென்றுள்ளது.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan