ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் என்னென்ன?.. இதோ லிஸ்ட்
வாரா வாரம் தமிழ் சினிமா இல்லை எல்லா மொழிகளில் படங்கள் ரிலீஸ் ஆகிய வண்ணம் உள்ளது.
கடந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான பெரிய நடிகரின் படம் என்றால் அது விக்ரமின் வீர தீர சூரன் படம் தான்.
மலையாள சினிமாவில் எடுத்துக்கொண்டால் ப்ருத்விராஜ் இயக்கி நடித்து மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் வெளியாகி இருந்தது. அதேபோல் ஹிந்தியில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படம் வெளியானது.
தமிழ், மலையாளம், ஹிந்தி என 3 மொழிகளிலும் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ஏப்ரல்
மார்ச் மாதம் முடிந்தது, தற்போது ஏப்ரலில் வெளியாகப்போகும் முக்கிய படங்களின் விவரத்தை காண்போம்.
டெஸ்ட்- எஸ். சஷிகாந்த் இயக்கத்தில் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளனர், படம் வரும் ஏப்ரல் 4ம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
குட் பேட் அக்லி- இந்த படத்திற்கு நோ இன்ட்ரோ, வரும் ஏப்ரல் 10ம் தேதிக்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
கேங்கர்ஸ்- சுந்தர்.சி-வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது.