வாரிசு திரைப்படம்
தெலுங்கு சினிமாவின் டாப் இயக்குனரான வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் வாரிசு.
குடும்பங்கள் கொண்டாடும் படமாக விஜய்யின் வாரிசு திரைப்படம் அமைந்திருக்கிறது.
முதல் நாளில் ரசிகர்களின் விமர்சனம் வர இரண்டாவது நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்க்க ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். 2 மற்றும் 3 நாட்களில் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருகின்றன.

படங்களின் லிஸ்ட்
விஜய் இதுவரை 66 படங்கள் நடித்து முடித்துவிட்டார், அடுத்து 67வது படத்திற்கான தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தான் ரசிகர்களிடம் ஒரு லிஸ்ட் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது விஜய் தனது சொந்த பெயரிலேயே எத்தனை படங்கள் நடித்துள்ளார் என்பது தான். இதோ அந்த லிஸ்ட்,
- வசந்த வாசல்
- நேருக்கு நேர்
- நாளைய தீர்ப்பு
- செந்தூரப்பாண்டி
- பிரியமானவளே
- ஒன்ஸ் மோர்
- தெறி