வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..லிஸ்ட் இதோ
சினிமாவில் கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பும், புகழும் படத்தில் வில்லனாக நடிப்பவர்களுக்கும் கிடைத்து வருகிறது. அந்த வகையில், படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களின் சொத்து மதிப்பு குறித்து கீழே காணலாம்.
ஆஷிஷ் வித்யார்த்தி:
"தில்" என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் நடித்த முதல் படமே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஒரு படத்திற்கு பல லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஆசிஷ் வித்யார்த்தி, சுமார் ரூ.90 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் என்று கூறப்படுகிறது.
ராணா டகுபதி:
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா டகுபதி. பாகுபலி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறந்து நடிப்பை வெளிப்படுத்தி அதன்மூலம் தமிழ் ரசிகர்களை சம்பாதித்த இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 முதல் ரூ. 6 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
தற்போது, இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.45 கோடி என சொல்லப்படுகிறது.
டேனியல் பாலாஜி:
கவுதம் மேனன் இயக்கிய 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலர் மத்தியில் பிரபலமானவர் டேனியல் பாலாஜி.
இவர் புகழ்பெற்ற நடிகராக தமிழ் சினிமாவில் பயணித்த மறைந்த முரளியின் தம்பி ஆவார்.
மாரடைப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் உயிரிழந்த இவரின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.
பிரகாஷ்ராஜ்:
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல துறைகளில் சிறந்து விளங்குபவர் பிரகாஷ்ராஜ். இந்திய திரை உலகின் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் கில்லி படத்தில் வில்லனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன்மூலம் ரசிகர்களை சம்பாதித்தார்.
ஒரு படத்திற்கு சராசரியாக ரூ. 2.5 கோடி வரை சம்பளம் வாங்கும் இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 40 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
