கமல், விஜய்யை தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களை இயக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரே கூறிய தகவல்..
தமிழ் சினிமாவில் தற்போது மிக முக்கிய இயக்குனராக கருதப்படுபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான இரண்டு திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் தான்.
மேலும் இவர் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அதனை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் உடன் விக்ரம் திரைப்படத்தில் பணியாற்ற உள்ளார் இயக்குனர் லோகேஷ், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வருவதால் பலரின் கவனம் இவர் மேல் திரும்பியுள்ளது.
அந்த வகையில் இவர் ராம் சரண் உள்ளிட்ட முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து ஒரு பேட்டியில் பதிலளித்துள்ள லோகேஷ், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களை முடித்த பின் முடிவு செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.