வேதாளம், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் இப்படியொரு லாஜிக் மிஸ்டேக்.. கலாய்க்கும் ரசிகர்கள்
லாஜிக் மிஸ்டேக்
அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தில் அஜித்தின் என்ட்ரி காட்சியில் இடம்பெறும் ஒரு இடத்தில் லாஜிக் மிஸ்டேக் ஆகியுள்ளது.
வேதாளம்
முதல் ஷாட்டில் ஒல்லியாக இருக்கும் நபர் ஒருவர், அடுத்த ஷாட்டில் சற்று குண்டாக மாறிவிடுகிறார். இதை ரசிகர்கள் மீம் போல் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
[
விண்ணைத்தாண்டி வருவாயா
அதே போல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் ஒரே நேரத்தில் சிம்புவும் திரிஷாவும் போனில் மெஸேஜ் செய்து பேசுகிறார்கள். ஆனால், இருவரின் போனிலும் வெவேறு நேரம் காட்டுகிறது.

ஆயிரத்தில் ஒருவன்
இதே போல் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் ரீமாசென் ஆப்பிள் மேக் புக்கை பயன்படுத்துகிறார், ஆனால் அதில் விண்டோஸ் எக்ஸ்.பி சாஃப்ட்வெர் இருக்கிறது.

இப்படி கொண்டாடப்பட்ட படங்களின் லாஜிக் மிஸ்டேக்கை கண்டுபிடித்து ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
இரண்டே நாட்களில் 2000 கோடியை கடந்து வசூல் செய்த அவதார்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை