Lokah Box office: நான்கு நாட்களில் இவ்வளவு கோடிகளா! வசூல் விவரம்..
Lokah
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் கல்யாணி ப்ரியதர்ஷன். இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் Lokah. இப்படத்தை முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் தயாரிக்க இளம் நடிகர் நஸ்லன் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இயக்குநர் டாமினிக் அருண் இப்படத்தை இயக்கியிருந்தார். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் இப்படத்தில் கல்யாணியின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். டோவினோ தாமஸ் நடித்து வெளிவந்த மின்னல் முரளி சூப்பர் ஹீரோ படத்திற்கு பின் கல்யாணியின் Lokah படமும் வெற்றியை கைப்பற்றியுள்ளது.
சென்சேஷனல் வசூல்
இந்த நிலையில், நான்கு நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Lokah திரைப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 62 கோடி வசூல் செய்து சென்சேஷனல் ஹிட் அடித்துள்ளது.