மோகன்லால் படத்தை பின்னுக்கு தள்ளி, மலையாளத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்த லோகா!! மாபெரும் வசூல் சாதனை
லோகா
நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்து கடந்த மாதம் திரைக்கு வந்த படம் லோகா சாப்டர் 1: சந்திரா. சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை இயக்குநர் டொமினிக் அருண் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் கல்யாணியுடன் இணைந்து சாண்டி மாஸ்டர், நஸ்லன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். துல்கர் சல்மான் இப்படத்தை தயாரித்து இருந்தார். மேலும் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் வசூல் சாதனை
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் வசூலில் வேட்டையாடி வந்தது. இந்த நிலையில், உலகளவில் இதுவரை லோகா திரைப்படம் ரூ. 265+ கோடி வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை லோகா படைத்துள்ளது.

இதற்கு முன் அதிக வசூல் செய்து நம்பர் 1 இடத்தில் மோகன்லாலின் லூசிஃபர் எம்புரான் படம் இருந்தது. ஆனால், தற்போது எம்புரான் படத்தை விட அதிக வசூலை ஈட்டி, அப்படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை லோகா பிடித்துள்ளது.
 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    