Lokah: Chapter 1- Chandra திரை விமர்சனம்
மலையாள சினிமா எப்போதும் கண்டெண்ட் விஷயத்தில் பல உலக படங்களுக்கு இணையாக போட்டி போட, தற்போது ஒரு சூப்பர் பவர் கொண்ட ஹீரோயின் கதைக்களத்தில் கல்யாணி, நஸ்லான் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த லோக எப்படியுள்ளது பார்ப்போம்.
கதைக்களம்
கல்யாணி படத்தின் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சண்டையிலிருந்து தப்பித்து, பெங்களூர் வருகிறார். அங்கு அவர் தன் அடையாளத்தை மறைத்து மக்களோடு மக்களாக வாழ்கிறார்.
அதே ஊரில் இரவு மனிதர்களை கடத்தி ஆர்கான் திருடும் கும்பல் திரிய, அதில் ஒருவருடன் கல்யாணிக்கு மோதல் ஏற்படுகிறது. அவரை கல்யாணி புரட்டி எடுக்கிறார்.
என்ன இவருக்கு இப்படி ஒரு சக்தி, யார் இவர் என்ற தேடல் தொடங்குகிறது, இந்த தேடல் இவரை ஆரம்பத்திலிருந்து இம்ப்ரஸ் செய்ய அவர் பின்னால் சுற்றும் நஸ்லான் மூலம் தொடங்குகிறது.
அப்படி ஒரு நாள் நஸ்லான், கல்யாணியை சந்தேகப்பட்டு அவர் பின்னால் போக, கல்யாணியும் அந்த ஆர்கான் திருட்டு கும்பலிடம் மாட்டுகிறார். அப்போது கல்யாணி ஆடும் ருத்ரதாண்டவத்தை பார்த்து நஸ்லான் மிரண்டு போக, கல்யாணி யார், எப்படி இவருக்கு இந்த பவர் வந்தது, எதற்கு இங்கே வந்துள்ளார் என்ற பல பரபரப்புகளே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
இந்திய சினிமாவில் பல வித்தியாசமான கதைக்களங்கள் வந்துக்கொண்டே உள்ளது, இதில் வாம்பயர் என்ற ஜானர் பெரிதும் வாரது இருந்த நிலையில் அதை இயக்குனர் டோம்னிக் அருன், தொட்டதோடு, அதை நம் களத்திற்கு ஏற்றவாரு நாட்டு தெய்வத்துடன் ஒப்பிட்டு எடுத்தது சிறப்பு.
அதற்காக கல்யாணி அப்படியே அந்த சந்திரா கதாபாத்திரத்தில் பொருந்தி போகிறார், ஆரம்பத்தில் தன் சக்தி வெளியே தெரியகூடாது என அவர் பொறுத்து பொறுத்து சென்றாலும், ஒரு கட்டத்தில் அவர் தன் சக்தியை வெளிக்கொண்டு வரும் இடம் மாஸ் நடிகர்களுக்கு இணையான காட்சி.
அதிலும் இடைவேளை எப்படி சந்திரா-வுக்கு இந்த சூப்பர் பவர் வந்தது என சிறு வயதில் காட்டும் கதையையும், தற்போது சந்திராவை கடத்தி வந்த ஆர்கான் திருட்டு கும்பலுடன் ஒப்பிட்டு அவர் வாம்பயர் ஆக மாறும் காட்சி சும்மா தீப்பறக்கிறது.
கல்யாணியை காதலிக்குக் கதாபாத்திரத்தில் நஸ்லான், ஏதோ காமெடியன் போல தான் படம் முழுவதும் வந்து செல்கிறார், ஆரம்பத்தில் கல்யாணியை இம்பரஸ் செய்ய அவர் செய்யும் வேலைகள், கடைசியில் அவர் வாம்பயர் என தெரிந்து அலறும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
படத்தில் கிட்டதட்ட வில்லன் போல் இதில் வருவது சாண்டி மாஸ்டர் தான், அவரும் படம் முழுவதும் ஒரு ஆணாதிக்க திமிருடன் வருவது, அதோடு வாம்பயர் பவர் அவருக்கு வர, அவர் எடுக்கும் முடிவுகள் என சாண்டி தன்னால் முடிந்த பங்கை சிறப்பாக செய்துள்ளார், ஆனால், சாண்டி-யை ஒரு குறிப்பிட்ட ரோல்-க்கே கமிட் செய்வது போலவே உள்ள்து.
மலையாள படங்கள் எப்படி இந்த சிறு பட்ஜெட்டில் இப்படி ஒரு குவாலிட்டியான படங்களை கொடுக்கிறார்கள் என்ற ஆச்சரியம் உள்ளது, ஒளிப்பதிவு, இசை என அனைத்திலும் செம ஸ்கோர் செய்ய, ஸ்டெண்ட் காட்சிகள் மிரட்டியுள்ளனர். கல்யாணியும் ஹீரோக்களுக்கு நிகராக ஸ்டெண்ட் காட்சியில் கலக்கியுள்ளார்.
படத்தின் முதல் பாதி என்ன, என்ன என்ற ஆர்வத்தை தூண்டி, இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிய திருப்பம் என்றில்லாமல், எல்லாமே நாம் எதிர்பார்த்தது போலவே தான் முடிகிறது, அது கொஞ்சம் சுவாரஸ்யத்தை குறைக்கிறது.
அதோடு கேமியோ காட்சிகள் எல்லாம் படத்தில் ஒரு கூடுதல் பலம் போல் தெரிந்தாலும், பெரிய இம்பாக்ட் என்பது இல்லை, வெறும் கைதட்டலுகாக வைத்தது போல் உள்ளது. ஒருவேளை அடுத்தடுத்த பாகங்களில் வலு சேர்பார்கள் போல.
க்ளாப்ஸ்
கதைக்களம்.
இடைவேளை காட்சி.
கல்யாணி ஒன் வுமன் ஷோ.
டெக்னிக்கல் விஷயங்கள்
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி இன்னமும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.