அமோக வரவேற்பை பெற்று வரும் Lokah: Chapter 1- Chandra படம்.. இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்..
Lokah
முன்னணி நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி ப்ரியதர்ஷன், சாண்டி மற்றும் நஸ்லன் நடிப்பில் உருவாகி கடந்த 28ம் தேதி வெளிவந்த திரைப்படம் Lokah: Chapter 1- Chandra.

இப்படத்தை இயக்குநர் டாமினிக் அருண் என்பவர் இயக்கியிருந்தார். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த மின்னல் முரளி படத்திற்கு பின், ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், Lokah: Chapter 1- Chandra திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu