பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் வேட்டை செய்யும் லோகா Chapter 1... மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
லோகா படம்
மலையாள மொழியில் சூப்பர் ஹீரோயின் கதை அம்சம் கொண்டு தயாரான படம் லோகா Chapter 1 சந்திரா.
கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வெளியான இந்த படத்திற்கு கேரளாவில் செம ரெஸ்பான்ஸ். டோம்னிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க அவருக்கு நஸ்லென், சாண்டி, சந்து சலீம்குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா என பலர் நடித்துள்ளனர்.
துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
Women Centric கதைக்களத்தை மையமாக கொண்டு வெளியான படங்களில் இந்த லோகா படத்திற்கு செம ரெஸ்பான்ஸ்.
படத்திற்கான விமர்சனம் நல்ல முறையில் வந்ததால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் சூப்பராக உள்ளது. 12 நாள் முடிவில் இப்படம் ரூ. 191 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
