இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படம் லோகா Chapter 1 படத்தின் இதுவரையிலான வசூல் விவரம்..
லோகா படம்
தமிழ் சினிமா ரசிகர்கள் மொழி பிரச்சனை இல்லாமல் படங்களை பார்த்து வருகிறார்கள்.
அப்படி மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் லோகா. இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடிக்க துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
கல்யாணியுடன் நஸ்லேன், டொவினோ தாமஸ் உள்ளிட்ட சிலர் நடிக்க சாண்டி மாஸ்டர் நாச்சியப்ப கவுடா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார்.
யக்ஷி அதாவது ரத்தக்காட்டேரி என்று கிராமப்புரங்களில் சொல்லப்படும் கதைகளில் இருக்கும் கதாப்பாத்திரத்தை வைத்து உருவாக்கப்பட்ட படமாகும்.
இப்படத்தின் கான்செப்ட் புதிதாக இருந்ததால், இது இந்திய அளவில் பெரிய ஹிட் அடித்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படம் தமிழ் மொழிகளில் வெளியாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்துள்ளது. 25 நாட்களில் இப்படம் மொத்தமாக ரூ. 275 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.