200 கோடி வசூல் சாதனை படைக்கபோகும் Lokah.. இதுவரை எவ்வளவு தெரியுமா
Lokah
மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனைகளை தொடர்ந்து படைத்து வரும் திரைப்படம் Lokah. இப்படத்தை டொமினிக் அருண் இயக்க நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.
இப்படத்தை துல்கர் சல்மான் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
தென்னிந்திய சினிமாவில் சோலோ ஹீரோயின் சப்ஜெக்டில் வெளிவந்து ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ள முதல் படம் இதுவே ஆகும். அதே போல் விரைவில் ரூ. 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இப்படம் இணையப்போகிறது. ஏனென்றால் இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 175+ கோடி வசூல் செய்துள்ளது.
ஒவ்வொரு நாளும் ரூ. 25 கோடி முதல் ரூ. 30 கோடி வரை வசூலை அள்ளிவரும் Lokah கண்டிப்பாக இன்னும் ஒரே நாளில் ரூ. 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இணைந்துவிடும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.