5 நாட்களில் Lokah படம் உலகளவில் செய்துள்ள சென்சேஷனல் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். ஹாலிவுட் திரையுலகில் இருந்து மட்டுமே சூப்பர் ஹீரோ படங்கள் தொடர்ந்து வெளிவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்திய சினிமாவில் இருந்தும் தரமான சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாகி வருகிறது.
Lokah
மின்னல் முரளி, மாவீரன், ஹீரோ, ஹனுமான் போன்ற சூப்பர் ஹீரோ படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வரிசையில் தற்போது தற்போது Lokah திரைப்படமும் இணைந்துள்ளது.
வசூல்
இயக்குநர் டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் மலையாளத்தில் வெளிவந்த படம் Lokah. இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், 5 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் Lokah இதுவரை உலகளவில் ரூ. 80கோடிக்கும் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் வசூலாக பார்க்கப்படுகிறது.

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
