வசூல் சாதனை படைக்கும் Lokah.. இதுவரை இத்தனை கோடியா
Lokah
இயக்குநர் டொமினிக் அருண் இயக்கத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Lokah. இப்படத்தை முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
வசூல்
முதல் நாளில் இருந்தே வசூலில் வேட்டையாடி வரும் Lokah திரைப்படம் இதுவரை 9 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிலையில், உலகளவில் இப்படம் ரூ. 145+ கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை சோலோ ஹீரோயின் படங்கள் செய்முடியாத வசூல் சாதனைகளை கல்யாணி ப்ரியதர்ஷனின் Lokah படம் செய்து வருகிறது.
விரைவில் இப்படம் ரூ. 200 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.