பாக்ஸ் ஆபிஸ்: மாபெரும் வசூல் சாதனை படைத்த லோகா.. சோலோவாக மாஸ் காட்டிய நடிகை கல்யாணி
லோகா
நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் டொம்னிக் அருண் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் திரைக்கு வந்த படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இப்படத்தை முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
சூப்பர்ஹீரோ சப்ஜெக்டில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதுவரை சோலோ ஹீரோயின் கதைக்களத்தில் வெளிவந்த எந்த ஒரு தென்னிந்திய படத்திற்கும் தராத ஆதரவை மக்கள் கொடுத்து வருகிறார்கள்.

தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ
200 கோடி
இதனால் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இப்படம் இணைந்தது. ஆனால், அதெல்லாம் இப்படத்திற்கு போதாது என்று தற்போது ரூ. 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் லோகா எண்ட்ரி கொடுத்துள்ளது. இதுவரை இப்படம் ரூ. 202+ கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது இப்படத்திற்கு மட்டுமின்றி மலையாள திரையுலகிற்கே கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். லோகா படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த யூனிவர்ஸில் இருந்து அடுத்தடுத்த படங்கள் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
