இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த லோகா சாப்டர் 1 படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
Lokah
டொமினிக் அருண் இயக்கத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் Lokah. இப்படத்தை முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மலையாள திரையுலகின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியுள்ளது.
யக்ஷி அதாவது ரத்தக்காட்டேரி என்று கிராமப்புரங்களில் சொல்லப்படும் கதைகளில் இருக்கும் கதாப்பாத்திரத்தை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது என்பதால் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர்.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அக்டோபர் 23ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும்.