மாபெரும் வசூல் சாதனை படைத்த லோகா.. அதிகாரப்பூர்வ அறிவித்த துல்கர் சல்மான்
லோகா
மலையாளத்தில் இருந்து வெளிவந்து வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் லோகா. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
கல்யாணி ப்ரியதர்ஷன் கதையின் நாயகியாக நடிக்க நஸ்லன், சாண்டி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் டொமினிக் அருண் இப்படத்தை இயக்கியிருந்தார்.
வசூல் சாதனை
ரூ. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் முதல் 10 நாட்களுக்குள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து 15 நாட்களுக்குள் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இந்த நிலையில், தற்போது 19 நாட்களில் லோகா படம் உலகளவில் ரூ. 250 கோடியை கடந்துவிட்டது என படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
What a journey! #Lokah hits 250+ crore in just 19 days. Thank you for the unstoppable love 🙏🤗❤️ pic.twitter.com/Sjg2lXgCeD
— Dulquer Salmaan (@_dulQuer) September 14, 2025
