லோகா படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா, முழு விவரம் இதோ
லோகா
முன்னணி தென்னிந்திய நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லோகா சாப்டர் 1 சந்திரா.
சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை டொமினிக் அருண் இயக்க கல்யாணி ப்ரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்திருந்தார். இவருடைய மிரட்டலான நடிப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
இப்படத்தில் சாண்டி மாஸ்டர், நஸ்லன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள இப்படம் இதுவரை 17 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
இந்த நிலையில், இதுவரை லோகா திரைப்படம் உலகளவில் ரூ. 235 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 250 கோடி எனும் மயில்கல்லை இப்படம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.