வசூல் சாதனை படைக்கும் லோகா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
லோகா
மலையாளத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்தது மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம் லோகா. இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.
கல்யாணி ப்ரியதர்ஷன் இப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்க, நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை டொம்னிக் அருண் இயக்கியிருந்தார்.
கடந்த மாதம் 29ம் தேதி திரைக்கு வந்த இப்படம் வசூலில் ஒவ்வொரு நாளும் சாதனை படைத்து வருகிறது.
வசூல்
இதுவரை பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகி வெளிவந்த எந்த படமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததே இல்லை. ஆனால், கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து வெளிவந்துள்ள இப்படம் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் அசால்ட்டாக இணைந்துவிட்டது. மேலும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த நிலையில், 11 நாட்களை கடந்து இருக்கும் லோகா திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 185 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இப்படம் இணையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என திரை வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
