கைதி படத்தில் கார்த்தி கையில் இருக்கும் கட்டப்பையில் இருப்பது தான் கதையே, உண்மையை உடைத்த லோகேஷ்
லோகேஷ் கனகராஜ் தற்போது இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டன் இயக்குனர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். அவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த விக்ரம் படம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் லோகேஷ் பல பேட்டி கொடுத்து வருகின்றார்.
அதில் ஒரு பேட்டியில், அவரிடம் கைதி 2 குறித்து கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் தான் தற்போது ட்ரெண்டிங்.

லோகேஷ் கூறுகையில் ‘கைதி படத்தில் கார்த்தி கையில் ஒரு கட்டப்பை இருக்கும், அதில் இருப்பது எல்லாம் அவர் கபடி விளையாடி ஜெயித்த கோப்பைகள்.
அவர் ஒரு கபடி ப்ளேயர், இதை வைத்து தான் அவரின் கதை தொடரும்’ என கூறி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார், அப்போ கண்டிப்பா கைதி 2 சரவெடி தான்.
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu