ஆபரேஷன் செய்து ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பில் இணைவது எப்போது?- லோகேஷ் கனகராஜ் தகவல்
கூலி படம்
கடந்த அக்டோபர் 10ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடிய திரைப்படம் வேட்டையன்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் ரூ. 240 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
நேற்று அக்டோபர் 14, லைகா நிறுவனம் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
கூலி படம்
வேட்டையன் படம் முடித்த கையோடு ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படப்பிடிப்பில் இணைந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே தனக்கு ஒரு ஆபரேஷன் இருப்பதாக படக்குழுவிடம் ரஜினி கூற அதற்கு ஏற்ப படப்பிடிப்பு வேலைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இப்போது ரஜினி ஆபரேசன் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி ஓய்வில் உள்ளார். தற்போது ரஜினிகாந்த் மீண்டும் எப்போது கூலி படப்பிடிப்பில் இணைவார் என லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர், கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பில் இணைய உள்ளதாக கூறியுள்ளார்.

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
