இதனால் தான் தளபதி 67 அப்டேட்ஸ் வரவில்லையா! இயக்குநர் லோகேஷ் அளித்த பேட்டி..
தளபதி 67 அப்டேட்ஸ்
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலே உச்சம் தோட்ட முக்கிய இயக்குநராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ்.
அடுத்தடுத்து வெற்றிகளை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் அவர் நினைத்தை போல கமலுக்கு ஒரு சிறந்த திரைப்படத்தை கொடுத்துள்ளார்.
20 நாட்களை கடந்து விக்ரம் திரைப்படம் இன்றும் திரையரங்களில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதன்படி விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ.380 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்துள்ளது.
இதனிடையே நமது சினிஉலகத்திற்கு பேட்டியளித்துள்ள லோகேஷ் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அதன்படி கமலின் பழைய விக்ரம் கதாபாத்திரத்தை போல விஜய்க்கு Spinoff திரைப்படம் எடுத்தால் எந்த கதாபாத்திரத்தை விரும்புவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் கனகராஜ் “கில்லி படத்தில் வேலு கதாபாத்திரம் தான்” என பதிலளித்துள்ளார்.
மேலும் தளபதி 67 குறித்து பேசிய லோகேஷ் “தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் அதை பற்றி பேச முடியும். மேலும் தற்போது அவர் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை முடித்த பின் தளபதி 67 குறித்து அப்டேட்ஸ் வரும்” என பேசியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu

இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவரா? கோலியை போலவே ரோகித்துக்கும் ஆப்பு அடிக்கப்போகும் பிசிசிஐ! Manithan

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri
