பீஸ்ட் மற்றும் நெல்சன் குறித்த ட்ரோல்ஸ்களுக்கு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்..

Report

டாப் இயக்குனரான லோகேஷ் 

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தற்போது டாப் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இதனால் இவருக்கென்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது என்றே கூறலாம், மேலும் விக்ரம் படத்தின் மூலம் இவர் தொடங்கியுள்ள LCU இனி பெரிய வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகமே இல்லை.

பீஸ்ட் மற்றும் நெல்சன் குறித்த ட்ரோல்ஸ்களுக்கு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்.. | Lokesh About Trolls On Nelson

நெல்சன் குறித்து லோகேஷ் கனகராஜ் 

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் விக்ரம் படம் குறித்து அளித்துள்ள பேட்டியில் பீஸ்ட்பட இயக்குனர் நெல்சன் ட்ரோல்ல்ஸ் குறித்து பேசியிருக்கிறார்.

அதில் "எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது, நெல்சன் எனக்கு நெருங்கிய நண்பர். எல்லோருக்கும் ஒரு இயல்பு உள்ளது, அதேபோல் எப்போதும் ஜாலியாக பேசும் இயல்புடையவர் நெல்சன். அவர் அப்படி இயல்பாக பேசியதை தவறாக எடுத்துக்கொண்டு ட்ரோல் செய்கிறார்களா என்பது தெரியவில்லை.

வெற்றியடையும் போது கொண்டாடிவிட்டு, தோல்வியடையும் போது விமர்சனம் செய்துவது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அளவுக்கு மீறின விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது" என பேசியுள்ளார் லோகேஷ்.

பீஸ்ட் மற்றும் நெல்சன் குறித்த ட்ரோல்ஸ்களுக்கு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்.. | Lokesh About Trolls On Nelson

திருமணம் முடிந்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற முதல் இடம் இது தான்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US