எனக்கும் பிளாக் யூமர் படங்கள் எடுக்க ஆசை.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி

vijay master kamal haasan karthi vikram lokesh kanagaraj vijay sethupathi nelson dhilpkumar kaithi
By Kathick Dec 04, 2021 05:50 PM GMT
Report

தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய முதல் படம் மாநகரம். இப்படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி வெற்றிபெற்றது.

இதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி எனும் படத்தை இயக்கி, ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

இதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து மாஸ்டர் படத்தை இயக்கி அதிலும் வெற்றியை கண்ட லோகேஷ், தற்போது விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.

கமல் ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சீரியசாக படம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில், தனக்கும் பிளாக் யூமர் படங்களை இயக்க ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்கள் மூலம் பிளாக் யூமர் கதைக்களத்தில் தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து வைத்திருப்பவர் நெல்சன் திலிப்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US