முன்னணி இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அப்பா என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ்
நேரம் வந்துவிட்டால் அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும் என்பது ஒரு பழமொழி.
அப்படி சினிமாவில் நுழைந்து முதல் படமான மாநகரம் தரமாக எடுக்க அடுத்தடுத்து முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, கமல் படங்களை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜிற்கு கிடைத்துள்ளது.
இப்போது லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார், படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
ரூ. 350 முதல் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளார்கள்.
குடும்பம்
படம் ரிலீஸை நெருங்கியுள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
அப்படி ஒரு பேட்டியில், எனது அப்பா பஸ் கன்டக்டர், ஒரு ஸ்டேஷனரி கடையும் வைத்திருந்தோம், அம்மா House Wife தான். நாங்கள் இரண்டு பசங்க. பேஷன் டெக்னாலஜி முடித்து சென்னை வந்தேன், இங்கு எம்பிஏ படித்தேன்.
பிறகு வங்கியில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறேன் என தனது குடும்ப பற்றி பேசியுள்ளார்.