லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படம்.. ஹீரோ யார் தெரியுமா
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் தற்போது தோல்வியை காணாத முன்னணி இயக்குனர் என்று பேரெடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இப்படம் வசூலில் மட்டுமே ரூ. 300 கோடியை எட்டியுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக தளபதி 67 உருவாகவுள்ளது என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் சூப்பர் ஹீரோ படம்
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் சமீபத்திய பேட்டியில், " உங்களிடம் இருந்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை எதிர்பார்க்கலாமா " என்று கேள்வி கேட்டப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த லோகேஷ் " ஏற்கனவே இரும்பு கை மாயாவி எனும் சூப்பர் ஹீரோ கதை எழுதிவிட்டேன் ". என்று கூறியுள்ளார்.
அப்படி இந்த கதை ஏற்பட்டால், ஏற்கனவே தேர்ந்தெடுப்பட்டபடி, சூர்யா தான் கதாநாயகனாக நடிப்பார் என்று தெரிகிறது.
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu