ரஜினியின் 171 பட கதை எப்படி இருக்கும், LCUக்குள் வருமா?- லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
லோகேஷ் கனகராஜ்
ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்து ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் ஏற்கெனவே தொடங்கி இப்போது திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தை முடித்த கையோடு ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
எப்படிபட்ட படம்
அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் ரஜினியின் 171 படம் எப்படி இருக்கும் என கேட்கப்பட்டது. அதற்கு அவர், இந்த திரைப்படம் LCUவிற்குள் வரவில்லை என்று ஆணித்தரமாக கூறினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் காவ்யாவிற்கு அடித்த லக்- படு மகிழ்ச்சியில் நடிகை, வாழ்த்தும் ரசிகர்கள்
மேலும் இந்த திரைப்படம் தனது இயல்பான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பாணியில் எடுக்கப்பட உள்ள படமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
படத்தில் இன்ப அதிர்ச்சி தரும் பல சூப்பர் ஹிட் நடிகர்கள் இந்த திரைப்படத்தில் உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.