உங்களை நான் அங்கே பார்த்துக் கொள்கிறேன்... லோகேஷிடம் கூறிய ரஜினி, என்ன ஆனது
கூலி படம்
விஜய்யுடன் லியோ படத்தை முடித்த கையோடு ரஜினியுடன் இணைந்து கூலி படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஷ்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினியுடன், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ்
படம் ரிலீஸிற்கு தயாராகியுள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
அப்படி ஒரு பேட்டியில் கூலி படத்தின் கதை சொல்ல போன போது நான் தீவிர கமல் ரசிகன் என ரஜினி சாரிடம் கூறினேன், அப்போது அவர் ஒன்றும் கூறவில்லை.
படம் முடிந்த பிறகு, கமல் ரசிகன் என கூறினீர்கள் அல்லவா, உங்களை நான் கூலி ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்துக் கொள்கிறேன் என நகைச்சுவையாக கூறிவிட்டு சென்றார் என லோகேஷ் கூறியுள்ளார்.