கருங்காலி மாலை அணிவதற்கு காரணம் அந்த விபத்து- முதன்முறையாக கூறிய லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் இப்போது இளம் இயக்குனர்களின் ராஜ்ஜியம் தான் நடக்கிறது.
முன்னணி நடிகர்கள் பலரின் படங்களை இளம் இயக்குனர்கள் தான் அதிகம் இப்போதெல்லாம் இயக்குகிறார்கள்.
அப்படி இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
அடுத்ததாக ரஜினியன் 171, கார்த்தியுடன் கைதி 2, கமலின் விக்ரம் 2 என அடுத்தடுத்து இயக்கும் படங்கள் ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது. தற்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்த இனிமேல் என்கிற சுயாதீன் இசை ஆல்பத்தில் ஹீரோவாக நடித்து கலக்கியுள்ளார்.
பிரபலத்தின் பதில்
லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் இசை ஆல்பத்தை புரொமோட் செய்யும் விதமாக நேர்காணல் நடந்தது. அதில் அவரிடம் கருங்கால மாலை அணிந்திருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர், விக்ரம் பட படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் போது விபத்தல் சிக்கியிருக்கிறார்.
அப்போது அவரது நண்பர் கலை இயக்குனர் சதீஷ் கருங்காலி மாலையை வாங்கிக் கொடுத்து இதை அணிந்துகொள் இது உன்னை சுற்றியுள்ள நெகட்டிவிட்டியை குறைக்கும் என சொல்லி கொடுத்தாராம்.
நண்பன் ஆசையாக கொடுத்தது என்பதால் அணிந்திருப்பதாகவும் மற்றபடி அதன் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.